Friday, July 26, 2019

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பின் சிறிதாக்கப்பட்ட வயிறு ஊதிப் பெருக்குமா?



பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பது உடல் எடையை குறைக்க பயன்படும் ஒரு அற்புதமான அறுவை சிகிச்சை முறை ஆகும். சில வகை பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைகளில் வயிறை அறுவை சிகிச்சை செய்து கிழித்து சிறியதாக ஆக்குவர். இந்த புதிய, சிறிய வயிறு குறைந்த அளவில் மட்டுமே உணவை எடுத்துக் கொள்ளும் திறன் உள்ளதாக இருக்கும்.

ஆனால் சில ஆண்டுகளில் இந்த சிறிய வயிறும் மெல்ல விரிவடைந்து அளவில் சற்றே பெரிதாகலாம். இப்படி பெரிதான வயிற்றில் உணவு நிறையும். அப்படி நிறைய உணவை எடுத்துக் கொள்ள நேர்ந்தால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையால் உடல் எடை வீழ்ச்சியடைந்தத நிலை திரும்பி உடல் எடை கூடி விட வாய்ப்பு இருக்கும். ஆகவே தான் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் கொடுக்கும் உணவுத் திட்டத்தை சரியாக பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறோம். பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வயிறு விரிவடையாமல் தடுக்க வேண்டும் என்றால், சிறிய அளவிலான உணவை அதிகமான இடைவெளியில் எடுத்துக் கொள்வது நல்லது. கூடவே உணவு சாப்பிடும்போது நீர் அருந்தாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் இது வயிறு விரிவடைவதை செய்யும். அதே நேரத்தில் உங்கள் உணவு பழக்கவழக்கம், வாழ்கை முறை, இவற்றை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளவேண்டும். இதையும் உடற்பயிற்சியையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வரவேண்டும்.

Call Springfield Wellness Centre and get to know the various types of bariatric surgeries available. Springfield Wellness Centre under the aegis of Dr. Maran, one of the best bariatric surgeon in Chennai, offers best bariatric surgery in Chennai.

#Obestiy #Bariatric #SpringfieldWellnessCentre

No comments:

Post a Comment