Thursday, October 10, 2019

Iron deficiency after Gastric Bypass is a possibility. Keep a Check - Tamil

காஸ்ட்ரிக் பைபாஸ் மற்றும் சில வகை பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டவர்களுக்கு சில வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகள் ஏற்படும் காரணம் அவர்களது வயிற்றின் அளவு குறைக்கப்பட்டு, சிறுகுடலின் பாதை  மாற்றி அமைக்கப் படுவதால் தான். அதனால் தான் இத்தகைய அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டவர்கள் வாழ்நாள் முழுதும் வைட்டமின் மற்றும் தாது மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக பரிந்துரைக்கப் படுகிறது. இரும்புச் சத்து குறைபாடும் அதில் ஒன்று. இதை சரி செய்யவில்லை என்றால் ரத்த சோகை என்று சொல்லப்படும் வெளுப்பு நோய் ஏற்படலாம். குறிப்பாக பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையை செய்துக் கொண்ட மாதவிடாய் ஏற்படும் வயதுப் பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது.

பொதுவாக இரும்புச் சத்து வயிற்றின் கடைசிப் பகுதியிலும், சிறுகுடலின் முதல் பகுதியிலும் உறிஞ்சப் படுகிறது. ஆனால் காஸ்ட்ரிக் பைபாஸ் செய்துக் கொண்ட பிறகு உணவு இந்த பகுதியில் செல்வதில்லை என்பதால் இரும்புச் சத்து உடலால் குறைவாக உறிஞ்சப்படுகிறது. அதனால் இரும்புச்சத்து சப்ளிமென்ட்  தவறாமல் உட்கொள்ளவேண்டும். அதே சமயம் உங்கள் உடலில் வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகள் உள்ளதா என்று உங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களை சில மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்வார்.

Visit Springfield Wellness Centre to avail the best weight loss surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment


No comments:

Post a Comment